பழவேற்காடு ஏரியில் தாய், மகள் உடல் கரை ஒதுங்கிய விவகாரம்: சொத்து பிரச்சினையில் தகராறு செய்த உறவினர்களிடம் விசாரணை
" alt="" aria-hidden="true" />

கும்மிடிப்பூண்டி,

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரவி (வயது 54). கொத்தனார். இவரது மனைவி வீரம்மாள்(43). மகன் பாலமுரளி(24), மகள் தேவயானி(20). ரவி குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் சிவா(56) குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.



 


இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொத்து பிரச்சினை தொடர்பாக ரவியை அவரது அண்ணன் சிவாவும், அவரது கும்பத்தாரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில், கடந்த 22-ம் தேதி முதல் ரவி தனது குடும்பத்தோடு மாயமாகி விட்டார். இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரவியையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வந்தனர்.

 

உடல்கள் கரை ஒதுங்கியது

 

இந்தநிலையில், பழவேற்காடு முகத்துவாரத்தில் ரவியின் மனைவி வீரம்மாள் மற்றும் அவரது மகள் தேவயானியின் உடல்கள் கரை ஒதுங்கியது. அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

இதனைத்தொடர்ந்து, மாயமான ரவியும், அவரது மகன் பாலமுரளியும் தற்கொலை செய்து கொண்டார்களா? அவர்களின் கதி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நேற்று முழுவதும் பழவேற்காடு முகத்துவாரத்தில் ரவியையும், அவரது மகன் பாலமுரளியையும் தொடர்ந்து மீனவர்கள் உதவியோடு தேடும் பணியை போலீசார் மேற்கொண்டனர்.

 

விசாரணை

 

ஆனால் நேற்று இரவு வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இன்றும் தேடுதல் வேட்டை தொடரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

மேலும், பழவேற்காடு ஏரியில் கரை ஒதுங்கிய தாய் வீரம்மாள் மற்றும் மகள் தேவயானி ஆகியோரின் உடல்கள் நேற்றுவரை பிரேத பரிசோதனை செய்யாததால், அவர்களின் உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

 

இந்தநிலையில், சொத்து பிரச்சினையால் ரவியுடன் தகராறில் ஈடுபட்ட அவரது அண்ணன் சிவா மற்றும் அவரது மகன் அஜித் ஆகியோரை பிடித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Popular posts
அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் அவர்கள் தற்காலிக அசைவம் மார்கெட் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்
Image
திருவண்ணாமலையில் அரசு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இலங்கை அகதிகள்
Image
<no title>2ம் நாளாக சரிவில் தங்கம் விலை : சவரன் ரூ.248 குறைந்து ரூ.32,488-க்கு விற்பனை ; பெருமூச்சு விடும் நகை பிரியர்கள்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மற்றும் வேடியப்பன் மலையில் காட்டுத் தீ பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் கிராம மக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம்
Image